April 20, 2021

IKIGAI – வாழ்க்கையின் அர்த்தம்

இன்று நாம் அனைவரும் தொலைத்த ஒன்றை , நம் நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் ஒரு புத்தகம் தான் இந்த IKIGAI

IKIGAI என்பது ஜப்பானிய மொழியில் ” வாழ்க்கைக்கான அர்த்தம் ” என்று பொருள் , ஆம் இந்த புத்தகத்தில் நமது வாழ்க்கையின் மிகப்பெரிய தேடலுக்கான விடை உள்ளது , அதைக்கொண்டு நமது ஆரோக்கியத்தினையும் , ஆயுளையும் எப்படி நமதாக்கி கொள்வதென்பதை, அதிக ஆயுளையும் உடல் நலத்தினையும் கொண்ட ஒரு ஜப்பானிய குக்கிராமத்தில் போய் அங்கு வாழும் மனிதர்களிடம் நேரடியாக அதன் வழி முறைகளை அறிந்து ஆசிரியர் இந்த புத்தகத்தினை எழுதி உள்ளார் .

யோகினோவா என்பது தான் அந்த தீவு அங்கு வாழும் மக்கள் யாவரும் அதிக ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் கொண்டு உள்ளனர் .

அது எப்படி சாத்தியமானது , சாத்தியம் தான். என்கின்றனர் அங்கு வாழும் 100 வயது வாலிபர்கள் .

ஆம் அங்கு 100 வயது என்பதாலும் ஒரு வயதே அல்ல , இன்னும் மூத்த குடிமக்கள் பலர் , பிறர் துணை இன்றி அங்கு உள்ளனர் , அவர்கள் இதற்காக மிக பெரிய மெனக்கெடல் எதுவும் செய்யவில்லை அவர்கள் செய்வது ஒன்று தான் அவர்களுக்கு புடித்தமாதிரி தங்கள் வாழ்வினை வாழ்கின்றனர் .

இந்த எந்திர தனமான தனது வாழ்க்கையினை விடுவித்து கொண்டு நிதானமாக மற்றும் மகிழ்ச்சியான தங்களது பயணத்தை தொடர்கின்றனர் .

அவர்களிடம் நாம் கற்று கொள்ள நமக்கு நெறைய உள்ளது .

  
1. பிடித்த விஷயங்களை மட்டுமே  செய்யவேண்டும் 
2. அது நமது பஸ்ஸின் ஆக இருக்கவேண்டும் 
3. அதன் மூலம் நமக்கு வருமானம் வரவேண்டும் 
4. அது இந்த உலகத்திற்கு எதாவது ஒரு பயனை அளிக்க வேண்டும் 

அது மட்டுமில்லாது அதனை நமது வாழ்க்கை முழுவதும் செய்து கொன்டே இருக்க வேண்டும் அது நம்மை, நாளையை உற்சாகத்துடன் செயல் பட வைக்கும் .

முதுமை எளிதில் வரக்காரணம் நம் அன்றாடம் நமக்கு புடிக்காத வேலையை செய்வது தான் . புடித்த விஷயங்களை செய்யும் பொது நமக்கு எப்போதும் சலிப்போ முதுமையோ ஏற்படாது  இவ்வாறு இந்த புத்தகத்தில் நம்மை புதுமை ஆக்கிக்கொள்ள வாழும் உதாரணங்கள் மூலம் நம்மை சிந்திக்க வைக்கிறார் இந்த புத்தகத்தில் ஆசிரியர்  

கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்  புத்தகத்தை வாங்க இங்க கிளிக் செய்யவும் 

https://amzn.to/3mCtum1
https://amzn.to/3mCtum1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *