April 20, 2021

செல்வமகள் சேமிப்பு திட்டம்


செல்வமகள் சேமிப்பு திட்டம், அரசு பெண் குழந்தைகளுக்காக துவங்க பட்ட மிக முக்கியமான ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். பொருளாதாரத்தில் பெண்களின் நிலை உயர வேண்டும் என்று துவங்க பட்ட ஒரு திட்டம் ஆகும் , இதற்கு அனைத்து திட்டங்களை காட்டிலும் அதிக வருவாய் தரும் ஒரு சேமிப்பு திட்டம் ஆகும்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சலகங்களில் , அரசு மற்றும் தனியார் வங்கிகளில் துவங்கலாம்


செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு

இந்த திட்டத்தில் பெண் குழந்தை பிறந்தவுடன் இந்த திட்டத்தை துவங்க முடியும் , பெண் குழந்தைகளுக்கு 10 வயது வரை வயது வரம்பு தரபட்டு உள்ளது.
10 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர முடியாது


திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை
பிறப்பு சான்றிதழ்
புகைப்படம்
தாய் தந்தையின் ஆதார் அட்டை


சேமிப்பு காலம்
15 முதல் 21 வயது வரை முதிர்வு ஆண்டுகள் ஆகும் குறைந்த பட்சம் 250 முதல் அதிக பட்சம் ஒரு ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை சேமிக்க முடியும் .

வரி சலுகை
இந்த திட்டத்தின் மூலம் 80 சி பிரிவின் கீழ் 1.50 வரை வரி சலுகை பெற இயலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *