April 20, 2021

2020 Top 5 Tamil movies

2020 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் மிக சிறந்த 5 படங்கள்


5 அந்தகாரம்
திரில்லர் பட வகையில் அந்தகாரம் இந்த வருடத்தில் மிக சிறந்த இடத்தை பெற்றுள்ள படம் அந்தகாரம் கடைசி வரை யூகிக்க முடியாத வகையில் கதை நகர்வு உள்ளது , அர்ஜுன்தாஸ் நடிப்பும் , வினோத் கிசான் நடிப்பும் மிரட்டும் வகையில் உள்ளது . இசை மற்றும் கேமரா ஆங்கிள் திரில்லர் படத்துக்கே உரிய பாணியில் படமாக்க பட்டுள்ளது ஓடீடீ பிளாட்பாமில் வெளியாகிய படம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது


4 பொன்மகள் வந்தாள்
ஜோதிகா நடிப்பில் கோர்ட் ட்ராமா வகையை சேர்ந்த படம் பொன்மகள் வந்தாள் , தனக்கான கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து வரும் ஜோதிகா இதில் தேர்ந்த நடிப்பினை அளித்துள்ளார் அதுபோக பாக்கியராஜ் , பார்த்திபன் போன்ற நடிகர் பட்டாளமே நடித்துள்ளது மிக சுவாரசியமான திரைக்கதை நகர்வு படத்திற்கான ஏதிர்பார்ப்பினை கூடுகிறது


3 ஓ மை கடவுளே
பேண்டஸி பட வகையை சேர்ந்த படம் ஓ மை கடவுளே , கணவன் மனைவி கிடையே நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் அதனால் ஏற்படும் விளைவுகள் அதை திருத்தி கொள்ள கடவுள் கொடுக்கும் மறு வாய்ப்பு என படம் மிக ஜாலியான படமாக உள்ளது , அசோக்செல்வன் , ரித்திகா சிங் ,வாணி போஜன், m.s பாஸ்கர் போன்றோர் தங்களது சிறந்த நடிப்பினை தந்து உள்ளனர் . இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் படத்தினை வேறு பரிணாமத்திற்கு கொண்டு செல்கின்றனர்


2 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம் , ஆரம்பம் முதல் இறுதி வரை ஜாலியான ஒரு படம் .
சின்ன சின்ன சஸ்பென்ஸ்கள் படத்தை இன்னும் சுவாரசியம் ஆக்குகின்றன . துல்கர் 25 வது படம் ,நடிப்பில் பட்டையை கிளப்பி உள்ளார் , இயக்குனர் கெளதம் இதில் நடிகனாக புது பரிணாமம் எடுத்துள்ளார் இசை பிரெஷாக உள்ளது


1 சூரரை போற்று
சூர்யாவின் நடிப்பில் மிக எதிர்பார்ப்புடன் வந்த படம் , மிக சிறந்த நடிப்பினை வழங்கி உள்ளார் இயக்குனர் சுதா இந்த படத்தின் மூலம் தன்னால் இந்த மாதிரியான ஒரு பிரம்மாண்ட படத்தினை தர என காட்டி உள்ளார் , பொன்னி கேரக்டரில் அபர்ணா பாலமுரளி பெண்ணியம் பேசியுள்ளார் இசை அமைப்பாளர் g.v பிரகாஷ் மிரட்டுள்ளார் மொத்தத்தில் இந்த வருடத்தின் மிக சிறந்த படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *